LOADING...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிக்கும் 'தாய்க்கிழவி'; வைரலாகும் டைட்டில் லுக்!
'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம், தனது அடுத்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிக்கும் 'தாய்க்கிழவி'; வைரலாகும் டைட்டில் லுக்!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 24, 2025
06:02 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிவகார்த்திகேயனின் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம், தனது அடுத்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது. மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு 'தாய்க்கிழவி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு ராதிகா சரத்குமார் ஒரு வலிமையான, கதையைத் தாங்கிப் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'கனா', 'டாக்டர்', 'டான்' போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து, வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுக்கும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தைத் தயாரிப்பது படத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

படத்தின் கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள்

தலைப்பு 'தாய்க்கிழவி' என்று இருப்பதால், இது ஒரு பாட்டி மற்றும் பேரனுக்கும் அல்லது ஒரு குடும்பத்திற்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பாசப் போராட்டமாக இருக்கும் என ரசிகர்கள் யூகின்றனர். அதேசமயம் ராதிகாவின் முத்திரை நடிப்பில் நகைச்சுவையும் கலந்த ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார் உடன் முக்கிய வேடத்தில் நடிகர் பாலா, முத்துக்குமார், ரேச்சல் ரெபேக்கா ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைக்கவிருப்பது நிவாஸ் கே. பிரசன்னா. ராட்சசன் படத்தின் எடிட்டர் சான் லோகேஷ் தான் இந்த படத்திற்கு எடிட்டராக பணிபுரிகிறார், மற்றும் ஒளிப்பதிவாளராக விவேக் இணைந்துள்ளார்.

Advertisement