
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று சில தினங்களுக்கு முன்னர் வைரலானது.
செயற்கை நுண்ணறிவு கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டீப்ஃபேக் வீடியோ வைரலானதையடுத்து அவர், மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அந்த டீப்ஃபேக் வீடியோவில் ரன்வீர் சிங் ஒரு அரசியல் கட்சிக்கு பிரச்சாரம் செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் சமீபத்தில் வாரணாசிக்கு சென்றிருந்த ஒரு வீடியோவுடன், AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ இணைக்கப்பட்டு இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சைபர் கிரைம் பிரிவினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ரன்வீரை போலவே நடிகர் அமீர் கானின் டீப்ஃபேக் வீடியோ ஒன்றும் சமீபத்தில் வைரலானது. இது குறித்து அவரும் புகார் அளித்துள்ளார்.
embed
ரன்வீர் சிங் புகார்
As per reports on a leading news portal, #RanveerSingh has filed a police complaint after a deepfake video that showed promoting a political party went viral.📢 pic.twitter.com/QBsBtFpweq— Filmfare (@filmfare) April 22, 2024