LOADING...
சிரஞ்சீவி பெயரில் பேரன்! ராம் சரண் - உபாசனா இரட்டை குழந்தைகளின் பெயரும் அதன் ரகசியமும்
ராம் சரண்- உபாசனா தம்பதி இரட்டை குழந்தைகளுக்கு மிக சிறப்பான முறையில் பெயர் சூட்டியுள்ளனர்

சிரஞ்சீவி பெயரில் பேரன்! ராம் சரண் - உபாசனா இரட்டை குழந்தைகளின் பெயரும் அதன் ரகசியமும்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2026
07:36 am

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா தம்பதியினர், தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு மிக சிறப்பான முறையில் பெயர் சூட்டியுள்ளனர். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி பிறந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, ஷிவ்ராம் மற்றும் அன்வீரா தேவி என பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெற்ற பாரம்பரிய 'நாமகரணம்' விழாவில் இப்பெயர்கள் சூட்டப்பட்டன.

காரணம்

பெயர்களின் சிறப்பம்சங்கள்

ஷிவ்ராம்: இது சிவன் மற்றும் ராமன் ஆகிய கடவுள்களின் பெயர்களின் தொகுப்பாகும். மேலும், ராம் சரணின் தந்தையான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இயற்பெயரான 'சிவ சங்கர வர பிரசாத்' என்பதன் நினைவாகவும் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. அன்வீரா தேவி: 'வீரம்' மற்றும் 'எல்லையற்றது' என்ற அர்த்தங்களை கொண்ட இப்பெயர், தைரியம் மற்றும் பெண்மையின் வலிமையை குறிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே க்ளின் காரா என்ற மகள் இருக்கும் நிலையில், தற்போது இந்த இரட்டையர்களின் வருகை தங்கள் வாழ்வை முழுமையடைய செய்துள்ளதாக உபாசனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement