NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிங்கப்பூரில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும், அவரது நாய்க்கும் மெழுகு சிலை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிங்கப்பூரில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும், அவரது நாய்க்கும் மெழுகு சிலை!
    சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் நிறுவனம் சிலையை திறக்க உள்ளது

    சிங்கப்பூரில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கும், அவரது நாய்க்கும் மெழுகு சிலை!

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 30, 2024
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரும், ஆஸ்கார் விருது வென்ற RRR படத்தின் நாயகனுமான ராம் சரணுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் நிறுவனம், அவரது நாயான ரைம் உடன் இணைந்து அவரின் மெழுகுச் சிலையை திறக்க உள்ளது.

    இது குறித்து அருங்காட்சியகம் சமீபத்தில் சரண் மற்றும் ரைம் இடம்பெறும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

    அந்த வீடியோவில் வரவிருக்கும் சிலைகளுக்கான அவர்களின் போட்டோஷூட்டின் காட்சிகளை வழங்குகிறது.

    அந்த கிளிப்பில், மேடம் டுசாட்ஸ் குடும்பத்தில் இணைந்ததற்காக மகிழ்ச்சியடைந்த ராம் சரண் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

    செயல்முறை

    மெழுகு சிலை குறித்து ராம் சரண் உற்சாகம்

    ராம் சரண் அவருடைய செல்ல நாயான ரைமுடன் ஸ்டுடியோவிற்குள் நுழைவதையும் அந்த வீடியோ காட்டியது.

    அங்கு அருங்காட்சியக ஊழியர்கள் மற்றும் மெழுகு கலைஞர்கள் தங்கள் அளவீடுகளை எடுத்தனர்.

    ரைமின் ஃபர் நிறத்தை துல்லியமாக பொருத்துவதில் குழு சிறப்பு கவனம் செலுத்தியது.

    "மேடம் டுசாட்ஸ் குடும்பத்தில் சேருவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று ராம் சரண் வீடியோவில் மீண்டும் வலியுறுத்தினார்.

    மேலும் இந்த மெழுகு சிலையின் மூலம் தனது ரசிகர்களுடன் நெருங்கி பழகுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.

    இந்த சிலைகளின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    👑 Chiru's Guinness World Record 💥
    🐆Charan's @MadameTussauds wax statue with #Rhyme what an year this has to be for "MEGA FAMILY & FANS"
    🌍 Honour to the @AlwaysRamCharan #GlobalStarRamCharan #GameChanger #RamCharan𓃵 #RaaMachacha pic.twitter.com/SfVDQAOnq6

    — 🚁 Kr!sH🚁 (@Krish_RC_) September 30, 2024

    தொழில்

    ராம் சரணின் வரவிருக்கும் திரைப்பட வெளியீடு 

    தொழில் ரீதியாக, சரண் தனது அடுத்த படமான கேம் சேஞ்சருக்கு தயாராகி வருகிறார்.

    ஷங்கர் இயக்கிய ஆக்‌ஷன் த்ரில்லரான இப்படத்தில் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, நாசர், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளது.

    இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    அவரது நடிப்பு வாழ்க்கையை தாண்டி, ராம் சரண் சமீபத்தில் தனது பரோபகார முயற்சிகளுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

    அவரும், அவரது தந்தை, சிரஞ்சீவியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெலுங்கானா CMRF க்கு தலா ₹50 லட்சம் நன்கொடை அளித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராம் சரண்
    சிங்கப்பூர்

    சமீபத்திய

    13 மாணவர்கள் தொடர்ந்த வழக்கு; நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை நீட் தேர்வு
    ஆபரேஷன் கிதியோன் சாரியட்ஸ்: காசாவில் புதிய ராணுவ தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் காசா
    பாகிஸ்தானை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்துவோம்; அசாதுதீன் ஒவைசி உறுதி இந்தியா
    பாகிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது யூடியூபர்

    ராம் சரண்

    பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்  தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி  விஜய் சேதுபதி
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    ராமர் கோவில் குடமுழுக்கு: அயோத்தியில் குவிந்த திரை பிரபலங்கள் அயோத்தி

    சிங்கப்பூர்

    சென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை வேண்டி மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் மு.க ஸ்டாலின்
    சிங்கப்பூரில் உயரும் சொத்து மதிப்பு: வாடகை வீடு எடுப்பது கூட இனி கடினம்  உலகம்
    சிங்கப்பூர் ஓபன் 2023 : முதல் சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி! பிவி சிந்து, பிரணாய்.எச்.எஸ்., சாய்னா நேவால் தோல்வி! பேட்மிண்டன் செய்திகள்
    சிங்கப்பூர் நாடாளுமன்ற எம்பிக்களாக பதவியேற்க இருக்கும் 3 இந்திய வம்சாவளியினர் நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025