LOADING...
தலைவர் 173 மெகா அப்டேட்: ரஜினிகாந்தை இயக்குகிறார் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி
ரஜினிகாந்தை இயக்குகிறார் சிவகார்த்திகேயன் பட இயக்குனர்

தலைவர் 173 மெகா அப்டேட்: ரஜினிகாந்தை இயக்குகிறார் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
07:51 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 வது திரைப்படமான 'தலைவர் 173' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இரு இமயங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் 'டான்' பட புகழ் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். முதலில் இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. ஆனால், கதையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் விலகிக் கொண்டதையடுத்து, சிபி சக்கரவர்த்திக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் பிரம்மாண்டமான படைப்பைத் தயாரிக்கிறது. சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு ரஜினி-கமல் கூட்டணி ஒரு படத்தில் இணையப் போவது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு

படத்தின் அறிவிப்பு மற்றும் வெளியீடு

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்று (ஜனவரி 3) தனது சமூக வலைதளப் பக்கத்தில் "Every HERO has a FAMILY" என்ற வாசகத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'தலைவர் 173' திரைப்படம் 2027 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபி சக்கரவர்த்தி தனது முதல் படமான 'டான்' மூலமே 100 கோடி வசூல் சாதனையைப் படைத்தவர். தனது இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement