
'ஜெயிலர் 2' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-இன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்ச்சியான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கேரளாவில் ஒரு படப்பிடிப்பு ஷெட்யூலை முடித்துவிட்டு திரும்புகையில், படத்தின் வெளியிட்டு தேதியை அறிவித்தார். அவர் கூறியதன்படி, ஜூன் 12, 2026 அன்று ஜெயிலர் 2 வெளியாகிறது. சென்னை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்ற போது அவர் இந்த செய்தியை அறிவித்தார்.
படப்பிடிப்பு விவரங்கள்
'ஜெயிலர் 2' படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பல இடங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த் கேரளாவின் பாலக்காடு அருகே காணப்பட்டார். அங்கே படமாக்கப்பட்ட அதிரடி காட்சிகள் மற்றும் விரிவான செட்டுகள் உள்ளூர் ரசிகர்களின் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தன. ஜெயிலர் 2 படத்தின் க்ளைமாக்ஸ் இந்த கேரள அட்டவணையில் படமாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவரங்கள்
நட்சத்திர பட்டாளம் நிறைந்த ஜெயிலர் 2
ஜெயிலர் படத்தில் ஏற்கனவே பரிச்சயமான கதாபாத்திரங்களுடன் மேலும் புதிய முகங்களின் கலவையுடன், அதிரடி காட்சிகள் அடங்கிய படமாக ஜெயிலர் 2 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மீண்டும் வருவார்கள். அவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் புதிய நடிகர்களாக நடிக்கின்றனர். நெல்சன் இயக்கிய ஜெயிலர், கலவையான விமர்சனங்களை மீறி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, உலகளவில் சுமார் ₹600 கோடி வசூலித்தது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கவிருப்பது அனிருத்.