LOADING...
திருச்சி கிழக்கில் போட்டியா? நீண்ட வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு நீண்ட விளக்க வீடியோ வெளியிட்டுள்ளார்

திருச்சி கிழக்கில் போட்டியா? நீண்ட வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 30, 2026
02:24 pm

செய்தி முன்னோட்டம்

நடன இயக்குநராக தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், கடந்த சில நாட்களாக தனது அரசியல் வருகை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்த பல்வேறு விவாதங்களில் சிக்கியிருந்தார். குறிப்பாக, சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் 'நாய்' மற்றும் 'புதிய வீடு' என்பதை உதாரணமாக கூறி பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த நிலையில், தம்மீதான விமர்சனங்களுக்கும், உள்குத்து அரசியல் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு நீண்ட விளக்க வீடியோவை வெளியிட்டு, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

விளக்கம்

'நாய்' சர்ச்சை: மாற்றுத்திறனாளி நண்பருடன் விளக்கம்

சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) செயல்பாடு மற்றும் புதிய ஆட்சி மாற்றம் குறித்துப் பேசிய லாரன்ஸ்,"ஒரு புதிய வீட்டிற்குள் செல்லும்போது அங்கிருக்கும் சூழலைப் பழகவும், அங்கிருக்கும் தெருநாய்களிடம் இணக்கமாக மாற பிஸ்கட்டோ, பிரியாணியோ தர வேண்டி இருக்கும்; அதுபோல ஒரு புதிய கட்சிக்கு மக்கள் சில காலம் அவகாசம் தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இது பொதுமக்களை நாய் என்று சித்தரிப்பது போல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து இன்று வெளியிட்ட வீடியோவில் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார். தன் மீதான இந்த அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கடந்த 20 வருடங்களாக தான் உதவி செய்து வரும் மாற்றுத்திறனாளி நண்பர் ஒருவரை தன் அருகில் அமர வைத்து, அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தல்

"திருச்சி கிழக்கில் போட்டியில்லை": ஏன்?

அரசியலுக்கு வந்த உடனே திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக (TVK) சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆவது அரசியல் தர்மம் கிடையாது என்று லாரன்ஸ் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார். "தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அந்தத் தொகுதிக்கு ஒரு நபரைத் தேர்வு செய்து வைத்திருக்கலாம், அல்லது அந்த இடத்திற்காகக் கட்சியில் ஆரம்பத்தில் இருந்தே உழைத்த தொண்டர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும்". உழைத்தவர்களைத் தாண்டி தான் நேரடியாக வந்து அந்த இடத்தை எடுத்துக் கொள்வது தர்மம் ஆகாது என்பதால், திருச்சி கிழக்கில் தவெக சார்பில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement