Page Loader
நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு 
அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு 

எழுதியவர் Nivetha P
Jul 11, 2023
02:29 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் நடித்த 'மாண்புமிகு மாணவன்', கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யூனிகேஷன் நிறுவன உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். இவர் நடிகர் அஜித் அவர்களுக்கு கடந்த 1996ம் ஆண்டு, ரூ.6 லட்சத்தினை கடனாக கொடுத்ததாக கூறுகிறார். தனது பெற்றோரை விடுமுறைக்கு மலேசியா அழைத்து செல்ல, அஜித் இவரிடம் பணம் வாங்கியதாகவும், தனக்கு ஒரு படம் செய்து தருவதாக கூறி, அதில் தனது சம்பளத்தில் இப்பணத்தினை கழித்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் மாணிக்கம் நாராயணன் அஜித் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால், அஜித் இதுவரை இவருக்கு படமும் செய்து தரவில்லை, பணத்தினையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

அஜித் 

கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையிலும், வாங்கிய கடனை கொடுக்காத காரணம் என்ன? என கேள்வி 

மேலும், "இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த பண விஷயம் குறித்து எங்கும் அவர் பேசக்கூட இல்லை. அவர் தன்னை ஒரு ஜென்டில்மேன் என்று சொல்லி கொள்கிறார். ஆனால் அவர் நிஜத்தில் அப்படி இல்லை" என்றும் தயாரிப்பாளர் கூறுகிறார். இதனை தொடர்ந்து, "அஜித்துக்கு நல்ல குடும்பம் உள்ளது. தற்போது அவர் ஒரு படத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இருப்பினும் அவர் எனது பணத்தினை திருப்பி தராமல் காலம் கடத்த வேண்டிய அவசியம் என்ன?" என்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கேள்வியெழுப்பியுள்ளார். இதே போல், ஏ.எம்.ரத்னம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் அஜித்தினை வைத்து எடுத்த படங்கள் மூலம் நஷ்டத்தினை அடைந்துள்ளனர். அவர்களுக்கும் அஜித் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.