Page Loader
'எதிர்நீச்சல்' தொடர் புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார் 
'எதிர்நீச்சல்' தொடர் புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்

'எதிர்நீச்சல்' தொடர் புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார் 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 08, 2023
10:37 am

செய்தி முன்னோட்டம்

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 57. மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாரிமுத்து, அதற்கு முன்னர் மணிரத்னம், வசந்த், SJ சூர்யா போன்றவர்களிடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்தவர். தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தவர். இவர், ஓரிரு படங்களையும் இயக்கியுள்ளார். மாரிமுத்து, சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர் நீச்சல்' தொடரில், ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 'யம்மா ஏய்' என்று அவரது ட்ரேட் மார்க் டயலாக் சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்