NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மறைந்த நடிகர் மனோபாலா கடைசியாக நடித்த படம்: வைரலாகும் புகைப்படங்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த நடிகர் மனோபாலா கடைசியாக நடித்த படம்: வைரலாகும் புகைப்படங்கள் 
    படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய மனோபாலாவின் புகைப்படமும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது

    மறைந்த நடிகர் மனோபாலா கடைசியாக நடித்த படம்: வைரலாகும் புகைப்படங்கள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 04, 2023
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா, நேற்று (மே 3.,) அன்று மதியம் உயிரிழந்தார்.

    அவரின் திடீர் மரண செய்தி திரைபிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அவரின் உடலுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரின் இறுதி ஊர்வலம் இன்று (மே 4 .,) காலை நடைபெற்றது.

    அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவரும் வேளையில், அவர் இறுதியாக நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    இயக்குனர் கதிர்வேல் இயக்கத்தில், யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பெயர் சூட்டப்படாத ஒரு படத்தில் தான் மனோபாலா, கடைசியாக நடித்து வந்தார்.

    card 2

    படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கொண்டாடிய மனோபாலா 

    மனோபாலாவின் பிறந்தநாளும் அந்த படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அந்த புகைப்படங்களை பகிர்ந்து, இயக்குனர் கதிர்வேல் ஒரு ட்வீட் இட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர், "கடைசியாக படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே"என்னால முடியலடா! மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா?கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா?" என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    பாரதிராஜாவின் அசிஸ்டண்டாக தனது திரை பயணத்தை துவங்கியவர் மனோபாலா. பல படங்களில், பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர், 'ஆகாய கங்கை' என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். நடிகர் சங்கத்திலும் முனைப்போடு செயல்பட்டவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    மனோபாலாவின் இறுதி படம்

    காலங்கள் கடந்தாலும்
    கடைசியாய் நடித்து எங்களோடு வாழ்ந்த கணங்கள் என்றும் எங்கள் நினைவில் நிலைத்து நிற்கும்.இயக்குனர் K V கதிர்வேலு&RAACK PRODUCTIONS PVT LTD

    — K.V.Kathirvelu (@Kvkathirvelu) May 3, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    நடிகர் சாம்ஸ்சின் ட்வீட்

    மனோ பாலா சாரின் மறைவு
    மிகவும் வருத்தமாக உள்ளது
    நண்பர் @Kvkathirvelu இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோ பாலா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இருக்கும்.
    அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    🙏😭💔 pic.twitter.com/Ap9BCFDuBV

    — @ACTOR CHAAMS (@ACTOR_CHAAMS) May 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படங்கள்
    வைரலான ட்வீட்
    தமிழ் நடிகர்

    சமீபத்திய

    ஒரே ஒரு இன்ஸ்டா போஸ்ட் தான்! அரண்டு போன அமெரிக்கா, கைதான Ex - FBI இயக்குனர் அமெரிக்கா
    3 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் பேச்சுவார்த்தைக்காக நேருக்குநேர் சந்தித்த ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகள் ரஷ்யா
    நேபாளத்திற்கு 15 டாடா கர்வ்வ் மின்சார கார்களை பரிசாக வழங்கியது இந்தியா; எதற்காக தெரியுமா? மின்சார வாகனம்
    85 மில்லியன் பாகிஸ்தான் சைபர் அச்சுறுத்தல்களைத் தடுத்ததாக கூறும் கேரள ஸ்டார்ட் அப் சைபர் பாதுகாப்பு

    கோலிவுட்

    நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!  தனுஷ்
    நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள் பிறந்தநாள்
    மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய்  பாலிவுட்
    வைரலாகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய டாட்டூ  தமிழ் நடிகை

    தமிழ் திரைப்படங்கள்

    தெலுங்கு வம்சாவளியாக பிறந்து, கோலிவுட்டில் கோலோச்சும் நடிகர், நடிகைகள் கோலிவுட்
    சிறு வயது கீர்த்தி சுரேஷ்; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் கோலிவுட்
    2023ல், பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி, பின்னர் பல மாற்றங்களை சந்தித்த திரைப்படங்கள் தமிழ் திரைப்படம்
    'சேது' முதல் 'அயோத்தி' வரை: வாய்மொழி விமர்சனங்களால் வெற்றி அடைந்த தமிழ் படங்கள் தமிழ் திரைப்படம்

    வைரலான ட்வீட்

    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    கவிஞர் வாலியை இழந்து வாடும் கவிஞர் வைரமுத்து; வைரலாகும் ட்விட்டர் பதிவு கோலிவுட்
    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் தமிழ்நாடு
    விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்? கோலிவுட்

    தமிழ் நடிகர்

    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக ஃப்ளாப் படங்கள் கொடுத்தவர்; ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவுக்கு அசோக் செல்வனின் பதிலடி தமிழ் திரைப்படங்கள்
    2023 இல் வெளிவர இருக்கும் டாப் ஹீரோக்களின் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    தனது பெயரையோ, குரலையோ சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: ரஜினிகாந்த் அறிக்கை ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025