
மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை!
செய்தி முன்னோட்டம்
கோலிவுட் சினிமாவின் நடிகரான விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்துள்ள படம் தான் பிச்சைக்காரன் 2.
இந்த படமானது ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் கதையானது 2016-ல் வெளியான ஆய்வுக்கூடம் படத்தில் திருடப்பட்டதாக மாங்காடு மூவிஸ் உரிமையாளரான ராஜகணபதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனால், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டனர்.
தற்போது இதற்கு பதில் மனு அளித்த விஜய் ஆண்டனி, ஆய்வுக்கூடம் படத்திற்கும் பிச்சைக்காரன் 2 படத்திற்கும் எந்த ஒற்றுமை இல்லை எனவும், படம் வெளிவாவதை தடுக்கும் நோக்கில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், படம் தள்ளிப்போனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | "பிச்சைக்காரன் 2 பட வெளியீட்டை தள்ளிவைத்ததால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது - நடிகர் விஜய் ஆண்டனி வேதனை#SunNews | #Pichaikkaran2 | #MadrasHC | @vijayantony pic.twitter.com/oBcuxnc8li
— Sun News (@sunnewstamil) April 18, 2023