Page Loader
விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்?
இயக்குனர் லோகேஷ்-ஐ ஆரவாரத்துடன் வரவேற்ற நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நெல்சன்-ஐ புறக்கணித்து ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்?

எழுதியவர் Venkatalakshmi V
Mar 31, 2023
11:30 am

செய்தி முன்னோட்டம்

சினிமாவில், தொடர் வெற்றிகள் தான், ஒரு கலைஞனின் இடத்தை நிர்ணயிக்கும் என பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். நீங்கள் மதிக்கப்பட வேண்டுமென்றாலோ, ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் என்றாலோ, தொடர் வெற்றிகளை தந்தாக வேண்டும். இல்லையென்றால், கீழே தள்ள படுவீர்கள். அப்படி ஒரு சம்பவம் தான் சமீபத்திய விகடன் விருது விழாவில் நடைபெற்றது. சென்ற ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில், விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படமும், கமல் நடிப்பில் விக்ரமும் இருந்தன. அதில் முந்தைய படம் பயங்கர தோல்வியை சந்தித்தது. மறுபுறம் விக்ரம் பயங்கர வெற்றி அடைந்தது. பல விருது விழாக்களில் விக்ரம் படம் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. விகடன் விருந்துகளிலும், சிறந்த படக்குழு என்ற விருதை வென்றது. அதை பெறுவதற்கு லோகேஷ் கனகராஜ் வந்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

வலுக்கும் கண்டனங்கள்

விகடன் விருதுகள்

புறக்கணிக்கப்பட்ட இயக்குனர் நெல்சன்

அப்போது பௌன்சர்கள் புடைசூழ, அவரை விழா குழுவினர் வரவேற்றனர். அவர் இருக்கையில் சென்று அமரும் வரை, அவருடன் சென்றனர். மறுபுறம், நெல்சன் விழாவிற்கு வந்தபோது, அவரை வரவேற்ற விழாகுழுவினர், அவரை "அப்படியே, நேரா போங்க சார்!" என்பது போல கைகாட்டி அனுப்பிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த பாரபட்சத்தை நெட்டிஸின்கள் கண்டித்தும் வருகின்றனர். ஒரு படம் தோல்வி அடைந்ததும், இவ்வளவு அவமானங்களா என கேள்வி எழுப்புகின்றனர், நெல்சனின் ரசிகர்கள். நெல்சன் தற்போது, ரஜினிகாந்துடன் இனைந்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ், லியோ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். படத்தின் காஷ்மீர் பகுதிகளுக்கான ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.