
நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது நயன்தாராவின் 'அன்னபூரணி' திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நயன்தாரா.
இவர் தனது 75வது படமான 'அன்னபூரணி' திரைப்படத்தினை இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்திருந்தார்.
'ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்' மற்றும் 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருந்தது.
நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில், சத்யராஜ், ஜெய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரெடின் கிங்க்ஸ்லி, கே.எஸ்.ரவிக்குமார், அச்யுத் குமார் போன்ற பலர் நடித்திருந்த இப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில், 'அன்னபூரணி' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 'அன்னபூரணி' திரைப்படம் டிசம்பர் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
டிசம்பர் 29ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது 'அன்னபூரணி'
Unga vayirum manasum neraika oru delicious movie oda varanga namma Lady Superstar😍#Annapoorani is coming to Netflix on 29 Dec in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi.#AnnapooraniOnNetflix pic.twitter.com/py82y1imn4
— Netflix India South (@Netflix_INSouth) December 24, 2023