
நயன்தாராவின் 75வது படத்தின் பெயர் 'அன்னபூரணி'
செய்தி முன்னோட்டம்
நயன்தாரா முதன்முதலாக நடித்த பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவரது 75 திரைப்படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
இன்று மாலை இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், இது இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது.
'அன்னபூரணி' திரைப்படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
'அன்னபூரணி' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவின் படி, ஒரு ஆன்மீக குடும்பத்தில் வளர்ந்த சுட்டி பெண்ணின் கதையாக இந்த திரைப்படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
'அன்னபூரணி' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்
#Annapoorani - The Goddess of Food is on her way to tickle your taste buds! #Nayanthara75 #Nayan75 🎥 pic.twitter.com/I1ZrRk5n4E
— Nayanthara✨ (@NayantharaU) October 24, 2023