41 வயதிலும் இளமை ரகசியம்! நடிகை நயன்தாரா கடைபிடிக்கும் ஒரே ஒரு முக்கியப் பழக்கம் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னுடைய நடிப்பாலும் வசீகரத்தாலும் பலரையும் கவர்ந்த நயன்தாரா, தன்னுடைய பிட்னெஸ் ரகசியத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார். 40 வயதை கடந்த பின்னரும் அவரது சருமம் மற்றும் கூந்தல் பொலிவுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கக் காரணம் என்ன என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு அவர் கூறிய பதில் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அழகுக்கான இரகசியம்
நயன்தாராவின் அழகுக்கான இரகசியம் என்ன?
ஆரோக்கியமான கூந்தல் மற்றும் சருமப் பராமரிப்பிற்கு அவர் கடைபிடிக்கும் வழக்கம் குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளன: நீரேற்றம்(Hydration): உடல் ஆரோக்கியத்திற்கும், சரும பொலிவிற்கும் போதுமான நீரேற்றம் (Water Intake) முக்கியமாக கருதுவதாக நயன்தாரா தெரிவித்துள்ளார். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடல் நச்சுக்கள் நீங்கி, சருமம் உள்ளிருந்து சுத்தப்படுத்தப்பட்டு, இயல்பான பொலிவைப் பெறுவதாகவும், இதுவே அவரது இளமையான தோற்றத்திற்கு அடித்தளம் என்றும் அவர் நம்புகிறார். சமச்சீர் உணவுமுறை: அதிகப்படியான சர்க்கரை மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து, சத்தான சமச்சீர் உணவு முறையைக் கடைபிடிப்பது அவரது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமைகிறது. அதோடு பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை தான் உட்கொள்வதாகவும், அதுவே அவரது உடலுக்கு ஏற்றதாக இருக்கும் என நம்புவதாகவும் கூறுகிறார்.