Loading...
"மகாபாரதம் படிச்சிட்டு வாங்க": நெட்டிசனை வெளுத்து வாங்கிய கல்கி இயக்குனர் நாக் அஸ்வின்
இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதத்தின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார்

"மகாபாரதம் படிச்சிட்டு வாங்க": நெட்டிசனை வெளுத்து வாங்கிய கல்கி இயக்குனர் நாக் அஸ்வின்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2026
02:32 pm

செய்தி முன்னோட்டம்

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கல்கி 2898 AD' திரைப்படத்தில், கர்ணனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்திற்கு இயக்குனர் நாக் அஸ்வின் மகாபாரதத்தின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார். பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடாத நாக் அஸ்வின், இந்த முறை மகாபாரத பக்கங்களை ஆதாரமாகக் காட்டி ரசிகர்களை அமைதியாக்கியுள்ளார். அண்மையில் வெளியான 'லெனின்' திரைப்படத்தில் நடிகர் பிரமோத் கர்ணனாக நடித்திருந்தார். அவரது நடிப்பை பாராட்டிய சமூக வலைதள பயனர் ஒருவர்,"பிக் ஸ்கிரீனில் கர்ணன் கதாபாத்திரம் இப்படித்தான் காட்டப்பட வேண்டும்" என்றும், 'கல்கி 2898 AD' திரைப்படத்தில் கர்ணன் பாத்திரம் மிகைப்படுத்தி காட்டப்பட்டதாகவும், படத்தின் கிளைமாக்ஸ் மகாபாரத வரலாற்றையே கொச்சைப்படுத்துவது போல் அமைந்துள்ளதாகவும் நாக் அஸ்வினை சாடியிருந்தார்.

பதில்

மகாபாரத ஆதாரத்துடன் நாக் அஸ்வின் பதில்

இந்த விமர்சனத்திற்கு நேரடியாக பதிலளித்த நாக் அஸ்வின், பிபேக் டெப்ராய் மொழிபெயர்த்த மகாபாரத புத்தகத்தின் ஒரு பக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில், மகாபாரதத்தின் 'துரோண வத பர்வத்தில்' அர்ஜுனனிடம் கிருஷ்ணரே கர்ணனை புகழ்ந்து பேசும் வரிகள் இடம்பெற்றுள்ளன.

"துரோண வத பர்வத்தில் அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் நேரடியாக கூறிய வார்த்தைகள் இவை. தயவுசெய்து மகாபாரதத்தை படியுங்கள், குறிப்பாக பிபேக் டெப்ராயின் பதிப்பை படிக்க பரிந்துரைக்கிறேன். அல்லது அர்ஜுனனிடம் கிருஷ்ணர் எத்தனை முறை கர்ணனைப் புகழ்ந்துள்ளார் என்பதை கூகுள் செய்து பாருங்கள். நமது வரலாற்றின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். பகுதி 2 வரை காத்திருங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

மாற்றங்கள்

கல்கி 2: புதிய மாற்றங்கள்

'கல்கி 2898 AD பார்ட் 2' திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், படத்தில் சில முக்கிய மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

முதல் பாகத்தில் 'சுமதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன், சில காரணங்களால் இரண்டாம் பாகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

தீபிகாவிற்கு பதிலாக நடிகை சாய் பல்லவி இந்த முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அலியா பட்டும் ஒரு முக்கிய வேடத்தில் இணையலாம் எனக் கூறப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களைத் தொடரவுள்ளனர்.

ADVERTISEMENT