ச.நா- பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு நற்செய்தி: இருவரும் இணைந்து பணியாற்ற போவதாக அறிவிப்பு
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு இனி அவரே இசையமைப்பதற்கான முடிவை அறிவித்துள்ளார். "இனிமேல் பா.ரஞ்சித்தின் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை" என்று அவர் தெரிவித்துள்ளார். சூது கவ்வும் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சந்தோஷ் நாராயணன், " 'அட்டக்கத்தி' படம் உருவாகும்போது, 'எனக்கு உன் மியூசிக் பிடிக்கல' என்று பா.ரஞ்சித் கூறினார். அதன்பிறகு கிராமிய இசை மீது கவனம் செலுத்த சொன்னார். என்னை உருவாக்கியதில் பா.ரஞ்சித்துக்கு பங்கு உண்டு" என்று கூறினார்.
மனக்கசப்புகள் மறந்து மீண்டும் இணையும் சூப்பர் கூட்டணி
சந்தோஷ் நாராயணன் மற்றும் பா.ரஞ்சித் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சில காலம் பணியாற்றாமல் இருந்த நிலையில், இப்போது சந்தோஷ் நாராயணின் இந்த அறிவிப்பை வெளியிட்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 'சூது கவ்வும்', 'கடைசி விவசாயி' ஆகிய இரண்டு படங்களையும் நான் எப்போது பார்க்க ஆரம்பித்தாலும் முழுமையாக பார்த்துவிடுவேன். எனக்கு மிகவும் பிடித்த படங்கள். நலனை பிடித்து வைத்திருக்கிறேன். அவரது அடுத்த படத்துக்கு நான் இசையமைப்பேன் என்று கூறிவிட்டேன். அதேபோல, பா.ரஞ்சித்தின் இனிவரும் படங்களுக்கு நான் தான் இசையமைப்பேன். யாரையும் உள்ளே வர விடமாட்டேன். இது என்னுடைய கட்டளை" என தெரிவித்துள்ளார்.