சுந்தர்.சி.யின் மூக்குத்தி அம்மன் 2: பல வருடங்களுக்குப் பிறகு படத்தின் பூஜையில் நயன்தாரா
செய்தி முன்னோட்டம்
பொதுவாக தான் நடிக்கும் படத்தின் விழாக்களிலோ, பூஜையிலோ நயன்தாரா கலந்து கொள்வதில்லை.
இது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்த போதும், தனது கொள்கையை அவர் மாற்றிக்கொண்டதே இல்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமை சென்னையில் நடந்த மூக்குத்தி அம்மன் 2 பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
விழாவில் நயன்தாரா, மூத்த நடிகைகள் குஷ்பு, மீனா, ரெஜினா கேஸான்ட்ரா, அபிநயா உள்ளிட்டவர்களுடன் அவர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாரா, இப்படத்திலும் அதே வேடத்தில் நடிக்கிறார்.
விவரங்கள்
அம்மன் வேடத்தில் நடிக்க நயன்தாரா உண்ணாவிரதம்
முதல் பாகத்தை RJ பாலாஜி இயக்கி இருந்தார். அப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தயாரிப்பாளர் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அதன் இரண்டாம் பாகத்தினை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக அவர்கள் இயக்குனர் சுந்தர்.சி-யை அணுகியுள்ளனர். அவர் ஒரே மாதத்தில் படத்தின் கதையை இறுதி செய்ததாக பூஜை விழாவில் ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
இப்படத்தினை பான்-இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான பட்ஜெட் ₹ 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனவும் கூறினார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததும், படத்தை உலகளவில் ப்ரொமோட் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இப்படத்தில் அம்மனாக நடிப்பதனால் நயன்தாரா மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"Dir SundarC came up with the #MookuthiAmman2 script in 30 days. I haven't heard any script like tha💥t. #Nayanthara is doing 1 Month Fasting for as she is doing Amman Character🔱. Movie budget will be 100Cr+ & will be made as a big scale Pan Indian Film😲. It's going to be an… pic.twitter.com/Opc1y6ZBHd
— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2025
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
After Ages FIRST TIME EVER Queen #Nayanthara attended For a Movie Launch [#MookuthiAmman2 ] 🥵🥵🥵🔥🔥🔥
— GetsCinema (@GetsCinema) March 6, 2025
Looks Like This Thing Happened only Becoz of #SundarC ✅
pic.twitter.com/lXHAJV9g3n
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Nayanthara who usually don't attend Film Pooja has now came in for #MookuthiAmman2 launch !!
— AmuthaBharathi (@CinemaWithAB) March 6, 2025
Here is the First shot of the film 🎬 pic.twitter.com/gNrzaFuNKN