LOADING...
லாலேட்டன் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு
லாலேட்டன் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு

லாலேட்டன் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2025
06:47 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது 2023 மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியத் திரைப்படத் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பைப் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்படுகிறது. லாலேட்டன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால், தீவிரமான, நுட்பமான மற்றும் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் மிக எளிதாக நடிக்கும் திறமைக்காகப் புகழப்படுகிறார். 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலகிலும் தனது திறமையால் முத்திரை பதித்துள்ளார்.

தேசிய விருதுகள்

மோகன்லாலின் தேசிய விருதுகள்

சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்ற இவர், தலைமுறைகளை ஈர்க்கும் அவரது குறிப்பிடத்தக்க சினிமா பயணம் மற்றும் கலைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் அவரது பங்கை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராட்டியுள்ளது. இந்த விருது செப்டம்பர் 23 அன்று நடைபெறும் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் வழங்கப்படும். கடந்த ஆண்டு, நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு