Page Loader
அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த  ஹாலிவுட் ஹீரோ ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்
ஹாலிவுட் ஹீரோ ஜெரமி ரெனர்க்கு விபத்து

அவெஞ்சர்ஸ் படத்தில் நடித்த ஹாலிவுட் ஹீரோ ஜெரமி ரெனர் விபத்தில் சிக்கி கவலைக்கிடம்

எழுதியவர் Saranya Shankar
Jan 03, 2023
03:36 pm

செய்தி முன்னோட்டம்

ஹாக் ஐ, ஹார்ட் லாக்கர், தி அரைவல், அவெஞ்சர்ஸ் மற்றும் மிஷன் இம்பாசிபிள் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஜெரமி ரெனர். 2008 -இல் தி ஹர்ட் லாக்கர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் 2010- இல் தி டவுன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு இவர் இரண்டாவது முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு விபத்து ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 51 வயதான இவர், பல ஆண்டுகளாக நெவாடா மாநிலத்தில் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தையொட்டி ஞாயிற்று கிழமை வீட்டு அருகே குவிந்து இருக்கும் பனியை அகற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

தீவீர சிகிச்சையில் ரெனர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரெனர் ஆபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்

ஆபத்தான நிலையில் தீவீர சிகிச்சை பிரிவில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவமனைக்கு உடனடியாக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் எலும்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இவருக்கு நேற்று (திங்கள் கிழமை) அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. CNN ஊடகத்தில் அவரின் நெருக்கமான வட்டாரங்கள் அவருக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அவருக்கு இதுவரை இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை கண்டு தாங்கள் மகிழ்ச்சி அடைந்ததாக செய்தியாளர்களிடம் ஜெரமி ரெனர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.