'மறுவார்த்தை பேசாதே' நடிகை மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதியின் மகனுடன் திருமணம்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
தனுஷுக்கு ஜோடியாக நடித்து, 'மறுவார்த்தை பேசாதே' பாடலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஹீரோயின்கள் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் அல்லது சக நடிகர்களைத் திருமணம் செய்து கொள்வது மிக சகஜமான ஒரு விஷயம் ஆகிவிட்டது.
சமீபத்தில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சாதாவுக்கும் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Actress megha akash marries politicians son
திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக பேசப்பட்டு வருகிறது
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ஏற்கனவே திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் நடிகை மேகா ஆகாஷ் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், மேகா ஆகாஷால் இதுவரை திரைப்பட உலகில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.
இவர் நடித்த, பூ, மனு சரித்ரா, மழை பிடிக்காத மனிதன் ஆகிய மூன்று திரைப்படங்களும் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.