Page Loader
மாமன்னன் திரைப்படம், வரும் 27ஆம் தேதி Netflix -இல் வெளியாகிறது 
மாமன்னன் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

மாமன்னன் திரைப்படம், வரும் 27ஆம் தேதி Netflix -இல் வெளியாகிறது 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2023
11:48 am

செய்தி முன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் நடித்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகும் முன்னரே இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் மாரி செல்வராஜின் முந்தைய படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் போன்றவை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அழுத்தமாக ஒலித்தது. மேலும், மாமன்னன் திரைப்படம், உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என பேசப்பட்ட நிலையில் இப்படத்தை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். படமும், அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமின்றி, வசூலிலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என கூறப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 27 ஆம் தேதி, நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

மாமன்னன் OTT ரிலீஸ்