Page Loader
'ராசா கண்ணு': மாமன்னன் படத்தின் முதல் பாடல் வெளியானது 
ஏஆர் ரஹ்மான் இசையில், வடிவேலு பாடிய, மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

'ராசா கண்ணு': மாமன்னன் படத்தின் முதல் பாடல் வெளியானது 

எழுதியவர் Venkatalakshmi V
May 19, 2023
05:13 pm

செய்தி முன்னோட்டம்

ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, 'மாமன்னன்' திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு' தற்போது வெளியாகி உள்ளது. 'வைகைப்புயல்' வடிவேலு தன்னுடைய 35 ஆண்டுகாலஅன்று திரை பயணத்தில், 'எல்லாமே என் ராசாவின் மனசிலே' படத்திலிருந்து பாட துவங்கினார். அதன் பின்னர், பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார். இருப்பினும், ரஹ்மான் இசையில் பாடியதே இல்லை. தற்போது அவர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் 'மாமன்னன்' படத்தில் அந்த மேஜிக் நடைபெற்றுள்ளது. இது குறித்து ரஹ்மானே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். "நம்ம வைகைபுயல் வடிவேலுவுடன் ஒரு பாடலை பதிவு செய்தேன். அவர் எங்களை முழுவதும் சிரிக்க வைத்தார் மற்றும் எங்கள் ரெகார்டிங் செஷனை மிகவும் மறக்கமுடியாததாக ஆக்கினார்!" என குறிப்பிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post