Page Loader
'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் 
'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் 

எழுதியவர் Nivetha P
Sep 08, 2023
07:14 pm

செய்தி முன்னோட்டம்

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் கதாபாத்திரத்தில் ஆண்டனியாக விஷாலும், ஜாக்கி பாண்டியன் என்னும் வில்லனாக எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இப்படம் வரும் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் லைகா நிறுவனம் விஷால் மீது தொடர்ந்த வழக்கு காரணமாக இப்படத்தினை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விஷால் 

பணத்தினை திரும்ப தராத காரணத்தினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது 

மேலும் இது குறித்த வழக்கில், வரும் 12ம் தேதி விஷால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பிரபல திரைப்பட பைனான்சியர் 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியனிடம் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் திரைப்படங்களை தயாரிக்க கடன் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி அவர் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்று அக்கடனை செலுத்தியுள்ளது. இந்த கடனை நடிகர் விஷால் திரும்ப தராத காரணத்தினால் தான் லைகா நிறுவனம் இவர் மீது வழக்கு தொடர்ந்தது என்றும் கூறப்படுகிறது. லைகா நிறுவனத்திற்கு விஷால் இன்னும் ரூ.15 கோடி கொடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.