Page Loader
'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது 
ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது

'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 09, 2023
02:01 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது 'ஜிகர்தண்டா டபுள்X' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில், SJ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடலான, 'மாமதுர' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை, இசையமைப்பாளர் GV பிரகாஷ் வெளியிட்டார். ஜிகர்தண்டா டபுள் X திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் நாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். வரும் நவம்பர் 10 ஆம் தேதி, தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தை, தமிழ் தவிர, ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்து வெளியிடவும், தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல்