Page Loader
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்கும் லைகா 
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்கும் லைகா

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்கும் லைகா 

எழுதியவர் Nivetha P
Aug 28, 2023
04:41 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் தற்போது தனது 'தளபதி 68' படத்தினை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று செய்திகள் அண்மையில் வெளியானது. இதனிடையே, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழில் ஓர் படத்தினை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் இயக்கவுள்ள திரைப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, விஜய்யின் 70-75 படத்தில் ஏதாவது ஒன்றினை அவரது மகன் இயக்குவார் எனும் கருத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனராகும் நடிகர் விஜய்யின் மகன்