
அதிரடி வசூல் வேட்டையாடிய 'Lokah' ஓடிடி ரிலீஸ் தேதி கசிந்துள்ளது!
செய்தி முன்னோட்டம்
வரலாற்றுச் சாதனை படைத்து, மலையாள சினிமாவில் முதல் ₹300 கோடி வசூலை எட்டிய சூப்பர் ஹீரோ திரைப்படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது. ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், தீபாவளி கொண்டாடட்டமாக வரும் அக்டோபர் 17-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இந்த வெளியீடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை
சாதனைப் படைத்த லோகா
துல்கர் சல்மான் தயாரிப்பில், டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்த இப்படம், திரையரங்குகளில் ₹300 கோடிக்கும் மேல் வசூலித்து சரித்திரம் படைத்துள்ளது. ₹30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், இந்தியாவில் ₹180.78 கோடியும், வெளிநாடுகளில் ₹119.3 கோடியும் ஈட்டி, மலையாள சினிமாவின் வசூல் சாதனையை முறியடித்தது. இந்த வெற்றியின் மூலம், மலையாளத்தில் ஒரு புதிய சூப்பர் ஹீரோ ஃபிரான்சைஸ் (Lokah Franchise) தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தடுத்த பாகங்களும் தயாராக உள்ளதாக இயக்குநர் டொமினிக் அருண் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப லோகா இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பு தரப்பு அறிவித்தது. அதில் துல்கர் சல்மான் மற்றும் டோவினோ தாமஸ் நடிக்கின்றனர் என அறிவிக்கப்பட்டது.