'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
அதன்படி இப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் படம் வெளியான முதல் நாளே, உலகம் முழுவதும் ரூ.140 கோடிக்கு மேல் 'லியோ' வசூல் செய்திருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவினை கொண்டாட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விழா
பாதுகாப்பு கோரும் தயாரிப்பு நிறுவனம்
இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியானது நடக்காமல் போன நிலையில், தற்போது இதன் வெற்றி விழாவை பிரம்மாண்டமான முறையில் கொண்டாட இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த விழாவினை வரும் நவம்பர் 1ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தவுள்ளார்களாம்.
இதற்கு நடிகர் விஜய் உள்ளிட்ட முக்கிய நடிகர்-நடிகைகள் பங்கேற்பதால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் காவல்துறையிடம் பாதுகாப்பு அளிக்க கோரி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியதோடு, ஆவலையும் அதிகரித்துள்ளது.