தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
செய்தி முன்னோட்டம்
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி என்பவர் தாக்கல் செய்த வழக்கில், "லியோ" தலைப்பு அவருக்கு சொந்தமானது எனவும், பட தயாரிப்பு நிறுவனத்தை தலைப்பை மாற்ற உத்திரவிட கோரியும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 20 ஆம் தேதி வரை படம் திரையிடப்படுவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
2nd card
லியோ பட குழுவினருக்கு தொடர்ந்து எழும் பிரச்சனைகள்
லியோ படக்குழுவினர் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் முறையிட்டிருந்தனர்.
தமிழ்நாடு அரசு படம் வெளியாகும் 19ஆம் தேதி 6 காட்சிகளுக்கும், 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு 5 காட்சிகளுக்கும் அனுமதி அளித்த அரசாணை வெளியிட்டிருந்தது.
பின்னர் தமிழ்நாடு அரசு பிறப்பித்த மற்றொரு அரசாணையில், காலை 9 மணிக்கு மேல் நள்ளிரவு 1:30 மணிக்குள், ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பது தொடர்பான முடிவை தமிழ்நாடு அரசிடமே விட்டுவிடுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.