LOADING...
இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

இன்பநிதி புகைப்படங்கள்: சூசகமாக பதிலளித்த கிருத்திகா உதயநிதி!

எழுதியவர் Sindhuja SM
Jan 05, 2023
05:38 pm

செய்தி முன்னோட்டம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மகனான இன்பநிதி ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் அதிகம் பேசப்பட்டது. ஒரு பெண்ணை இன்பநிதி கட்டிபிடித்திருப்பதை போல் இருக்கும் அந்த புகைப்படங்கள் 'லீக்' ஆனதில் இருந்து பல விதமான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனால், இன்பநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரும் அதிகம் விமர்சிக்கப்பட்டனர். இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது இன்பநிதியின் தாயும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருக்கிறார். இதில் அவர், "நேசிக்கவும் அதை வெளிப்படுத்தவும் பயப்பட வேண்டாம். இயற்கையை அதன் முழு மகிமையில் புரிந்துகொள்வதற்கு இதுவும் ஒரு வழியாகும்." என்று சூசகமாக கூறி இருக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்: