LOADING...
'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன்
'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன்

'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன்

எழுதியவர் Nivetha P
Sep 02, 2023
07:13 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் கடந்த 2019ல் 'திருமணம்' என்னும் திரைப்படத்தினை இயக்கி நடித்திருந்தார். அதன்பின்னர் 4 ஆண்டுகள் எந்த படத்தையும் இயக்காமலும், நடிக்காமலும் இருந்த இவர்,'ஆனந்தம் விளையாடும் வீடு' என்னும் படத்தில் கடந்த 2021ல் நடிக்க மட்டும் செய்திருந்தார். இந்நிலையில், தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ தகவல்படி சேரன் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் திரைப்படத்தினை இயக்கவுள்ளார் என்று தெரிகிறது. 'நான் ஈ' படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் கிச்சா சுதீப். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை என்பதால் 'கிச்சா 47' என அழைக்கப்படுகிறது. இன்று கிச்சா சுதீப் பிறந்தநாள் என்பதால் இதுகுறித்த அறிவிப்பினை இப்படக்குழு இணையத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

'கிச்சா 47' திரைப்படத்தின் புதிய போஸ்டர்