மீண்டும் கமல்ஹாசனுடன் இணையப்போகும் 'வைகைபுயல்' வடிவேலு?
செய்தி முன்னோட்டம்
'வைகைப்புயல்' வடிவேலு! இந்த பெயர் மட்டும் சொன்னால் போதும். அனைவரும் இதழோரமும் ஒரு புன்முறுவல் தோன்றும்.
தனது டைமிங் காமெடி மற்றும் உடல்மொழியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டவர் இவர்.
ராஜ்கிரண் படத்தில் சிறிய காமெடி வேடத்தில் நடிக்க வந்தவரை, 'தேவர் மகன்' படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்தவர் கமல்ஹாசன்.
அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.
எனினும் 'தேவர் மகன்' திரைப்படத்தில் அவர் நடித்த வேடத்தை அடிப்படையாக கொண்டே, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'மாமன்னன்' படத்தின் கதையை எழுதியதாக இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.
card 2
கமல்ஹாசன் கதையில் வடிவேலு?
இதனிடையே, 'மாமன்னன்' படத்தின் ப்ரோமோஷனின் போது வடிவேலுவிடம், "மீண்டும் இது போன்ற சீரியஸ் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா?" என கேட்கப்பட்டது.
அப்போது அவர்,"எப்போதாவது நல்ல கதை கிடைத்தால், கண்டிப்பாக நடிப்பேன்" எனக்கூறியிருந்தார்.
'மாமன்னன்' திரைப்படத்தில், அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, அவர் மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து பணியாற்றுவார் என செய்திகள் வெளியாகின.
இது குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது மாரி செல்வராஜ் பாணியில் சீரியஸ் கதாபாத்திரமாக தான் இருக்கும் எனவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, கமல்ஹாசனும் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
கமலிடம் ஒரு அரசியல் கதை உள்ளதாம், அதில் வடிவேலுவை நடிக்க வைக்க அவர் விரும்புவதாக தெரிகிறது. எனினும் அதில் கமல்ஹாசன் நடிப்பாரா என்பது குறித்த தகவல் இல்லை.