Page Loader
கமல்ஹாசன் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்?

கமல்ஹாசன் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 06, 2023
05:00 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் கமல்ஹாசனுடன் 80 களில் ஜோடியாக நடித்தவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பின்னாளில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்தார். தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டபிறகு, மும்பையிலேயே செட்டில் ஆனவர், புலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி தந்தார். இந்திய சினிமாவில் எவெர்க்ரீன் நடிகை என புகழப்பட்ட ஸ்ரீதேவி, சில ஆண்டுகளுக்கு முன்னர், துபாயில் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஜான்வி பாலிவுட்டில் பிரபல நடிகையாக உள்ளார். தற்போது தெலுங்கில் Jr NTR உடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

card 2

தமிழ் சினிமாவில் ஜான்வி?

தெலுங்கு சினிமா வரை வந்துவிட்ட ஜான்வியை, எப்படியேனும் தமிழ் பேச வைக்க வேண்டும் என தமிழ்பாட பல தயாரிப்பாளர்கள், அவர்களின் திரைப்படங்களுக்கு ஜான்வியை புக் செய்ய முயற்சி வந்தாலும், எவருக்கும் பிடிகொடுக்காமல் இருந்துள்ளார். தற்போது அந்த முயற்சியில் கமல்ஹாசன் வென்றுள்ளதாக தெரிகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'லவ் டுடே' திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் இத்திரைப்படம் ஒரு மாயாஜாலக்கதை எனக்கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தயாரிக்கவிருப்பது, கமலின், 'ராஜ்கமல் இன்டெர்னஷனல்' நிறுவனம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அஜித்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், தற்போது இந்த படத்தை தான் இயக்கப்போகிறார்.