
"மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றினார்!": போலீசில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா
செய்தி முன்னோட்டம்
பிரபல சமையல் கலைஞரும், "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் நடுவராகவும் அறியப்படும் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி பின்னர் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பதிவு செய்துள்ளார். ஜூலை மாதம், தனது சமூக வலைதளங்களில் ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்ததாகவும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி "Mr & Mrs Rangaraj" எனும் தலைப்பில் இருவரும் கோவிலில் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, "Baby loading 2025" என்ற குறிப்பு மூலம் தன்னுடைய கர்ப்பத்தையும் உறுதி செய்தார். இந்த நிலையில் இப்படி ஒரு புகார் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவரங்கள்
ஏற்கனவே திருமணமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்
ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜாயின் பதிவையடுத்து, சமூக வலைதளங்களில் விவகாரம் விவாதப்பொருளாகி போனது. இந்த நிலையில் மாதம்பட்டி விவாகரத்து பெற்றுவிட்டார் என சிலர் கூற, முதலாவது மனைவி ஸ்ருதி இன்னும் "Madhampatty Rangaraj's wife" என தனது இன்ஸ்டாகிராமில் சுயவிவரத்தை மாற்றாமல் இருக்க, கூடவே கடந்த சில நாட்களுக்கு முன் ரங்கராஜ், தனது மனைவியோடு ஒரு திருமண விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனைத்தொடர்ந்து, ஏமாற்றமடைந்ததாகக் கூறிய ஜாய், தற்போது காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளார். தனது புகாரில், "7 மாத கர்ப்பமாக இருக்கும்போது என்னைத் துரத்திவிட்டார்" எனக்கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | "மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடைய கணவர். நான் அவரோட வாழணும். என் வயித்துல இருக்கிற குழந்தைக்கு அவர்தான் அப்பா.. அவரிடம் கடைசியா பேச முயற்சி பண்ணும்போது என்னை அடித்தார்.."
— Sun News (@sunnewstamil) August 29, 2025
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்#SunNews | #MadhampattyRangaraj | #JoyCrizildaa pic.twitter.com/iW53JyABb3