
அஸ்கார்ஸ் 2024: சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை, நிர்வாணமாக மேடைக்கு வந்து அறிவித்தார் ஜான் சேனா
செய்தி முன்னோட்டம்
96வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், நடிகர் ஜான் செனா நிர்வாணமாக மேடையில் தோன்றி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ஆடைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே ஜான் சேனா இப்படி செய்ததாக கூறினார்.
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை 'புவர் திங்ஸ்' திரைப்படம் வென்றதாக அவர் அறிவித்தார்.
இந்த திரைப்படம் ஏற்கனவே மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த ஒப்பனை, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் ஆடைகள் ஆகியவற்றில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்றுது இந்த திரைப்படம்.
முன்னதாக இதே போல பல பிரிவுகளில் வெற்றிகளை குவித்து வருகிறது கிறிஸ்டோஃபர் நோலனின் 'ஓப்பன்ஹெய்மர்' திரைப்படம்.
சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், உள்ளிட்ட பல விருதுகளை தற்போது வரை பெற்றுள்ளது இந்த திரைப்படம்.
ட்விட்டர் அஞ்சல்
ஜான் சேனா
Never expected this from him 😳 John Cena at Oscars 2024 #Oscars #Oscars2024 #JohnCenapic.twitter.com/0T0CnyBlbt
— Leo Dass (@LeoDasVj) March 11, 2024