நடிகர் ஜீவா நடித்துள்ள தகப்பன் திரைப்படத்தின் தங்கப்புள்ள பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான தகப்பன் படத்திலிருந்து 'தங்கபுள்ள' என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தனது எக்ஸ் தளத்தில் இப்பாடலின் இணைப்பைப் பகிர்ந்த நடிகர் ஜீவா, "கவிதை, மகிழ்ச்சி மற்றும் நம் வாழ்வின் மிக அழகான கொண்டாட்டம். அன்பின் தூய்மையான வடிவத்தை தகப்பன் படத்தின் முதல் பாடலான #Thangapulla மூலம் அனுபவியுங்கள்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
காதல்
பாசம் மற்றும் பிரிவை வெளிப்படுத்தும் வரிகள்
கவிஞர் பா.விஜய் வரிகளில், மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில் உருவான இப்பாடலை பாடகர் முருகவேல் தனது உருக்கமான குரலில் பாடியுள்ளார்.
தன் மகனுடன் நெருக்கமாக இருக்க ஏங்கும் ஒரு தந்தையின் பாசப் போராட்டத்தை இப்பாடல் கண்முன் நிறுத்துகிறது.
வீடியோ காட்சிகளில் ஜீவாவின் கதாபாத்திரம், தனது மகன் பிரேமை தூரத்திலிருந்து அமைதியாகப் பின்தொடர்ந்து பார்த்து ரசிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மகனின் மீது அளவில்லா பாசம் வைத்திருந்தும், சில குடும்பச் சூழல்களால் தான் அவனது தந்தை என்பதை அவனிடம் நேரடியாகக் காட்ட முடியாமல் தவிக்கும் ஒரு தந்தையின் உணர்ச்சிப் பிணைப்பை இப்பாடல் நெஞ்சை உலுக்கும் வகையில் விவரிக்கிறது.
மதுரை பின்னணி
கிறிஸ்துமஸ் ரிலீஸ்
லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, நகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை கே.பி.நந்தபாலனும், சண்டைப் பயிற்சிகளை மகேஷ் மேத்யூவும் கவனித்துள்ளனர்.
மதுரையை மையமாகக் கொண்டு தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான உணர்வுபூர்வமான பாசப் பிணைப்பையும் குடும்ப விழுமியங்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'தகப்பன்' திரைப்படம், வரும் டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The poetry, the joy, and the most beautiful celebration of our lives. ❤️
— Jiiva (@JiivaOfficial) October 30, 2026
Experience love in its purest form with #Thangapulla - the first single from #Thagappan
🔗https://t.co/swdBLcjbd4@larkstudios1 @JiivaOfficial @rajisha_vijayan @LakshmyRamki @ravenkatdir83… pic.twitter.com/ckD1tux7dQ