ஜெயம் ரவி பிறந்தநாள் - 'சைரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' என்னும் திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பு நிறுவனமான 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' தயாரித்துள்ளது. த்ரில்லர், ஆக்க்ஷன், க்ரைம் உள்ளிட்ட பாணியில் இப்படத்தினை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதில் மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(செப்.,10) ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ ஒன்றினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.