Page Loader
ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார்
ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார்

ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார்

எழுதியவர் Sekar Chinnappan
May 17, 2025
05:32 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரவி மோகன் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, திரைப்பட தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் அவரது கூற்றுகளை பகிரங்கமாக மறுத்து, ஆதாரங்களை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார். ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை ஒரு கணவராக அல்லாமல் வருமான ஆதாரமாக மட்டுமே நடத்துவதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள சுஜாதா விஜயகுமார், 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மூத்த திரைப்பட தயாரிப்பாளரான தனக்கு, குற்றச்சாட்டுகள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் அவதூறான கருத்துகள் தெரிவித்ததால் தான் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறினார்.

அமைதி

பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அமைதி

தனது பேரக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அமைதியாக இருந்தபோதிலும், தொடர்ச்சியான தவறான கதைகள் பரவுவதால் உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். ஜெயம் ரவி தான் திரைப்படத் தயாரிப்புக்குத் திரும்ப ஊக்குவித்தார் என்றும், இதனாலேயே அடங்க மறு, பூமி மற்றும் சைரன் ஆகிய படங்களைத் தயாரித்தேன் என்றார். இந்த படங்களுக்காக பைனான்சியர்களிடம் ₹100 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாகவும், அதில் 25% ரவி மோகனுக்கு சம்பளமாக செலுத்தியதாகவும், அதற்கான ஆவணங்கள் ஆதாரமாக இருப்பதாகவும் அவர் கூறினார். ரவி மோகனை பெரிய கடன்களுக்கு பொறுப்பாக்கியதாக வைத்த குற்றச்சாட்டை மறுத்த சுஜாதா, அவரிடம் ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்குமாறு கூறினார். மேலும், தனது மகளும் மருமகனும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post