
அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார்.
அங்கே ஹிந்தி சினிமாவில் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அந்த திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. மொட்டை தலையுடன் மற்றும் ராணுவ உடையில் என இரு வேறு கெட்அப்-களில் தோன்றி இருந்தார் ஷாருக்.
மிகவும் வைரலாகி வரும் இந்த ட்ரைலரை அடுத்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகின.
அவையும் சார்ட்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திரைப்படம் தணிக்கை குழுவிடம், சான்றிதழுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தணிக்கை குழு, திரைப்படத்தில் 7 இடங்களில் வசங்களையும், காட்சிகளையும் மாற்ற சொல்லியுள்ளது. படத்தின் நீளம், 169 .8 நிமிடங்கள் ஆகும்.
ட்விட்டர் அஞ்சல்
'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை
#Jawan Censor Certificate , Censor Cuts And Runtime details.
— Azam Sajjad (@AzamDON) August 22, 2023
7 modification done to last print pic.twitter.com/b4R7Y8uq09