LOADING...
'I am coming': ஜனநாயகன் டிரெய்லர் வெளியானது; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

'I am coming': ஜனநாயகன் டிரெய்லர் வெளியானது; விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 03, 2026
07:24 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையில் 69வது மற்றும் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தின் அதிரடியான டிரெய்லர் இன்று (ஜனவரி 3) மாலை வெளியாகி வைரலாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், விஜயின் அரசியல் வருகைக்கு முன்னதாக வரும் கடைசிப் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பம்சங்கள்

டிரெய்லர் மற்றும் படத்தின் சிறப்பம்சங்கள்

டிரெய்லரின் மூலம் படத்தின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை அறிய முடிகிறது: அதிரடி மற்றும் கமர்சியல்: ஆக்ஷன், காமெடி மற்றும் சென்டிமென்ட் என அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஒரு பக்கா கமர்சியல் சினிமாவாக வினோத் இதை செதுக்கியுள்ளார். நட்சத்திரப் பட்டாளம்: விஜய்க்கு ஜோடியாகப் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் பாபி தியோல் (வில்லனாக), மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இசை: அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், ட்ரெய்லரின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்துள்ளது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ் மற்றும் கடைசிப் படம்

வெளியீட்டுத் தேதி: ஜனநாயகம் திரைப்படம் வரும் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சினிமா விடைபெறுதல்: இந்தப் படத்தோடு விஜய் சினிமாவை விட்டு முழுமையாக விலகி, தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மூலம் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். எனவே, இது அவரது கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளனர்.

Advertisement

அப்டேட்

இசை வெளியீட்டு விழா அப்டேட்

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா 'மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்' இடம் பிடித்துள்ளது. இந்த விழாவில் விஜய் பேசிய 'குட்டி ஸ்டோரி' அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியை நாளை (ஜனவரி 4) மாலை 4 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம். திரையுலகில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த விஜயின் கடைசிப் பயணம் ஜனநாயகன் மூலம் வெற்றியுடன் முடியுமா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement