LOADING...
ஜன நாயகன் சென்சார் அப்டேட்: தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் ஆக வாய்ப்பு
ஜன நாயகன் தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் ஆக வாய்ப்பு

ஜன நாயகன் சென்சார் அப்டேட்: தேர்தலுக்கு பிறகே ரிலீஸ் ஆக வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2026
04:52 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், தணிக்கை வாரியத்தின் (CBFC) மறுபரிசீலனை குழுவின் பார்வைக்காக நாளை திரையிடப்படவுள்ளது. NDTV வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஏற்கனவே கடந்த வாரம் நடைபெற வேண்டிய இந்தத் திரையிடல், குழு உறுப்பினர் ஒருவரின் உடல்நலக்குறைவால் தள்ளிப்போனது. அந்த செய்தியின்படி, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளதாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், அரசியல் பின்னணி கொண்ட இந்தப் படம் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, ஜூன் 4-ஆம் தேதி வெளியாகவுள்ள 'டாக்ஸிக்' படத்துடன் இணைந்தோ அல்லது ஜூன் மாத இறுதியிலோ 'ஜன நாயகன்' வெளியாக வாய்ப்புள்ளது.

சர்ச்சை

ரீமேக் சர்ச்சை மற்றும் தணிக்கை சிக்கல்

இந்தப் படம் தொடங்கியதிலிருந்து இது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என ரசிகர்களால் கணிக்கப்பட்டது. அதற்கேற்றாற் போல படத்தின் டீசரும், பாடல் காட்சிகளும் கிட்டத்தட்ட அதை உறுதி செய்தது. தொடர்ந்து சென்சார் செர்டிபிகேட்டிற்கு சென்ற போது, ராணுவ இலச்சினைகளை அனுமதி இன்றி பயன்படுத்தியது மற்றும் சில மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் தொடர்பாக எழுந்த புகார்களால் படம் தணிக்கை சிக்கலில் சிக்கியது. இதற்காக நடைபெற்ற சட்ட போராட்டத்தை தொடர்ந்து வழக்கை தயாரிப்பு நிறுவனம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக CBFC மறுபரிசீலனை குழுவின் பார்வைக்கு படத்தை அனுப்பியுள்ளது.

Advertisement