Page Loader
100 கோடியை நெருங்கிய ஜெயிலர் வசூல்; நிரம்பி வழியும் திரையரங்குகள் 
100 கோடியை நெருங்கிய ஜெயிலர் வசூல்

100 கோடியை நெருங்கிய ஜெயிலர் வசூல்; நிரம்பி வழியும் திரையரங்குகள் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2023
01:26 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் 'ஜெயிலர்'. 'அண்ணாத்தே' படத்திற்கு பிறகு இரண்டாண்டுகால இடைவேளைக்கு பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் திரைப்படம் என்பதால், அவரின் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். கூடுதலாக, நெல்சன் இயக்குகிறார் என்பதாலும், அவரின் படத்தில் இருக்கும் டார்க்-காமெடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ரசிக்க வைக்கும் என்பதால், படத்தை காண பலரும் ஆர்வத்தோடு இருந்தனர். போதாதற்கு அனிருத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ஆட்டம் போட வைத்தன. இந்நிலையில், 'ஜெயிலர்' திரைப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 100 கோடி வசூலை நெருங்கி உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக வரவுள்ள வாரவிடுமுறையினால், வசூல் கூடுதலாக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஜெயிலர் வசூல்