Page Loader
'சாக்லேட் பாய்' 12B ஷாம் பிறந்தநாள் இன்று!
'வாரிசு' படத்தின் போது, நடிகர் விஜயுடன், ஷாம்

'சாக்லேட் பாய்' 12B ஷாம் பிறந்தநாள் இன்று!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2023
09:05 am

செய்தி முன்னோட்டம்

2001ல் வெளியான 12 பி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இன்றுவரை படத்தின் பாடல்கள் பிரபலம். அறிமுக நாயகன் ஷாமிற்கு ரசிகர்கள் ஏராளம். இந்த 12 B திரைப்படத்தில், பல புதுமைகளும், அறிமுகங்களும் இருந்தன. சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்பட்ட சிம்ரனும், ஜோதிகாவும் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஷாமிற்கு முதல் படம். ஆனாலும் இந்த இரு கனவுக்கன்னிகளுடனும் ஜோடி சேர்ந்து டூயட் பாட வாய்ப்பு கிடைத்தது. மறைந்த இயக்குனர் ஜீவாவின் முதல் படம். இந்த படத்தில், 'மிர்ச்சி' சிவா ஒரு சிறிய வேடத்தில் தோன்றி இருப்பார். இது போல, பல ஸ்பெஷல்கள் நிறைந்த படத்தில் அறிமுகம் ஆன ஷாம், தொடர்ந்து பல படங்களில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்தார்.

ஷாம்

மதுரை மண்ணின் மைந்தன் ஷாம்!

இவர் நடித்த 'லேசா லேசா' படத்தின் மூலம்தான் திரிஷா, ஹீரோயினாக அறிமுகமானார். ஷாம், மதுரையில் பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை பெங்களூருவில் படித்த ஷாம், மாடலிங் மூலமாகதான் சினிமா வாய்ப்பை பெற்றார். சுவாரஸ்யமாக, 'குஷி' படத்தில், விஜய்யின் நண்பராக சிறிய வேடத்தில் நடித்த ஷாம், தற்போது வெளியான 'வாரிசு' திரைப்படத்தில், விஜய்யின் அண்ணனாக நடித்திருந்தார். ஜனநாதன் இயக்கத்தில் வெளியான 'இயற்கை' திரைப்படம், இவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் எனலாம். சில படங்களுக்கு பிறகு, ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கபட்ட ஷாம், அதன் பிறகு காணாமல் போனார். தற்போது 'வாரிசு' மூலம் மீண்டும் வெள்ளி திரைக்கு வந்தவர், ஒரு ஊடகத்தின் பேட்டியில், தானே படம் தயாரித்து நடிக்கும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.