Page Loader
மகன் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்த இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா மோகன்
பெற்றோர்களானதை அறிவித்த அட்லீ மற்றும் பிரியா மோகன்

மகன் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்த இயக்குனர் அட்லீ மற்றும் பிரியா மோகன்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 01, 2023
01:46 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் இயக்குனர் அட்லீக்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் மகன் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் நேற்று (ஜன.31) இருவரும் பதிவிட்டு இருந்தனர். இவர்களுக்கு திரையுலக நண்பர்களான கீர்த்தி சுரேஷ், சமந்தா, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் பலரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில், பிரியாவிற்கு நடந்த பிரமாண்ட வளைகாப்பு நிகழ்ச்சியில், நடிகர் விஜய் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பள்ளிப்பருவ நண்பர்களான ப்ரியாவும், அட்லீயும் கடந்த 2012 -ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில், அட்லீ தற்போது, ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

அட்லீ மற்றும் பிரியா மோகன்!