
விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் அவர்கள் தனது மனைவியை விவாகரத்து செய்தாக தகவல் வெளியானது.
மேலும் வேறொரு நடிகையுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக வெளியான செய்தி விஜய்யின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் அட்லீ, பிரியா தம்பதியரின் வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் விஜய் அவர்கள் கலந்து கொண்டார். ஆனால் இவருடன் சங்கீதா அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
பொதுவாக விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா அவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் வாரிசு படத்தின் வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா அவர்கள் வரவில்லை.
வதந்திகள்
நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷை திருமணம் செய்தாரா?
இதனையடுத்து சில யூடியூப் சேனல்கள் விஜய், சங்கீதா இருவரும் பிரிந்து விட்டதாக வதந்திகளை பரப்பி வந்தனர்.
ஆனால் உண்மையில் இந்த வருட விடுமுறையை கழிப்பதற்காக தனது மகள் மற்றும் மகனுடன் சங்கீதா லண்டன் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் தனது மனைவியை பார்ப்பதற்காக விஜய் அவர்கள் லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய்யின் விக்கிபீடியா பக்கத்தில் சில மாற்றங்கள் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி விஜய்க்கும் சங்கீதா அவர்களுக்கும் பரஸ்பர விவாகரத்து நடந்து இருவரும் பிரிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷை விஜய் திருமணம் செய்து விட்டார்.
விஜய்க்கு 3 குழந்தைகள் இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.