
தீபாவளி விருந்தில் வைரங்களால் ஜொலித்த நீதா அம்பானியின் ஹாண்ட் பேக்கின் விலை தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் இல்லத்தில் அக்டோபர் 12 அன்று நடைபெற்ற பிரமாண்டமான தீபாவளி விருந்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அவரது மருமகள்கள் ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஸ்லோகா மேத்தா ஆகியோருடன் கலந்துகொண்டார். விருந்தில் நீதா அம்பானி அணிந்திருந்த மின்னும் ஆடை மற்றும் மரகதக் காதணிகள் இணையத்தை ஈர்த்தாலும், அவரது தோற்றத்தின் உண்மையான மையம் அவர் வைத்திருந்த அரிதான மற்றும் விலையுயர்ந்த ஹாண்ட் பேக் ஆகும்.ஹாண்ட் பேகின் மேல் பகுதி முதலை தோலைப் போலவும், உடல், கைப்பிடிகள், பூட்டு மற்றும் பிற பகுதிகள் முழுவதும் வைரங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விலை
$2 மில்லியன் மதிப்புள்ள ஹெர்ம்ஸ் Sac Bijou ஹாண்ட் பேக்
நீதா அம்பானி வைத்திருந்த ஹெர்ம்ஸ் நிறுவனத்தின் 'பிர்கின்' ரகத்தைச் சேர்ந்த சாக் பிஜோ (Sac Bijou) ஹாண்ட் பேக், உலகின் மிகவும் விலையுயர்ந்த ஹெர்ம்ஸ் பிர்கின் நிறுவனத்தின் பிரத்யேக தொகுப்பாகும். சோத்பியின் தகவல்படி, இந்த வகை பைகள் தற்போது உலகில் மூன்று மட்டுமே உள்ளன. இந்த ஹாண்ட் பேக்கின் விலை $2 மில்லியன் (இந்தியா மதிப்பில் தோராயமாக ₹17,73,24,200) ஆகும். சொகுசு ஃபேஷன் பக்கமான 'த்ரீ ஓவர் சிக்ஸ்' இன்ஸ்டாகிராம் பக்கத்தின்படி, இந்த பேக் 18k வெள்ளை தங்கத்தால் நுணுக்கமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம்இதில் மொத்தமாக 3,025 பளபளக்கும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மொத்த எடை 11.09 காரட் ஆகும்.