NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள்
    ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய படங்கள்

    ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிப் பட்டியலில் 10 இந்தியப் படங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 12, 2023
    01:22 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகின் உயரிய திரைப்பட விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதிற்கு தகுதி பெறும் படங்களின் பட்டியல், சமீபத்தில் வெளியானது. அதில் கிட்டத்தட்ட 301 படங்கள், உலகம் முழுவதிலிருந்தும் தேர்வாகியுள்ளன.

    வெளியிடப்பட்ட படங்களின் தேர்வு பட்டியல் (eligibility list) படி, இந்தியாவிலிருந்து 10 திரைப்படங்கள் தேர்வாகி உள்ளது. அவை:

    காஷ்மீரில் நடந்த கலவரங்கள் தொடர்பாக, விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.

    இயக்குனர் ரா.பார்த்திபன் இயக்கி நடித்த தமிழ் திரைப்படமான 'இரவின் நிழல்'.

    சென்ற ஆண்டு வெளிவந்து, வெற்றிகரமாக ஓடிய, கன்னட இயக்குனர், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம்.

    உண்மை சம்பவங்களின் அடிப்படையாக, திரைப்பட நடிகர் மாதவன், முதன் முறையாக இயக்கி நடித்த, 'ராக்கெட்ரி' திரைப்படம்.

    இந்திய படங்கள்

    ஆஸ்கர் விருது போட்டியில் இந்திய படங்கள்

    ஹிந்தி திரைப்பட நடிகை ஆலியா பட் நடித்த, 'கங்குபாய் கத்தியவாடி' படமும் இதில் இடம்பெற்றுள்ளது.

    இதோடு, ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் ஹிட்டான, RRR திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    மற்றும், குஜராத்தி மொழி திரைப்படமான, Chhello Show -உம், 'மீ வசந்த்ராவ்', 'தி நெக்ஸ்ட் மார்னிங்', மற்றும் கன்னட மொழி படமான விக்ராந்த் ராணா-வும் தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

    இந்த 95 -வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, வரும் மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், RRR திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல், கோல்டன் குளோப்ஸ் விருதை பெற்றுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    பிரசவத்திற்கு வந்த பெண் வயிற்றில் கைக்குட்டை தைத்த மருத்துவர் - விசாரணைக்கு உத்தரவு இந்தியா
    சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை பாயசத்தில் தரம் குறைவு - ஆய்வில் வெளிவந்த உண்மை இந்தியா
    ஹல்த்வானியின் 4,000 குடும்பங்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சி! இந்தியா
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி வங்கிக் கணக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025