சென்சார் சர்ச்சை முடிவுக்கு வருகிறதா? தமிழக முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலையில் ரிலீஸ்?
செய்தி முன்னோட்டம்
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 'ஜனநாயகன்', நீண்ட இழுபறிக்கு பிறகு இந்த ஜூலை மாதமே திரைக்கு வரவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக நிலவி வந்த சென்சார் சிக்கல்கள் இந்த வாரம் முடிவுக்கு வந்து, படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே திரையரங்குகளில் வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், படத்தில் உள்ள சில அரசியல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தணிக்க வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் படத்தின் HD பிரிண்ட் ஆன்லைனில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ்
A சான்றிதழுடன் ஜூலை ரிலீஸ்?
தற்போது வெளியாகி வரும் ஊடக தகவல்களின்படி, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'A' சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ் பதிப்பிற்கான சான்றிதழ் கிடைத்தவுடன் தெலுங்கு, இந்தி மொழிகளுக்கான தணிக்கை பணிகளும், வெளிநாட்டு விநியோகஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளும் உடனடியாகத் தொடங்கப்பட உள்ளன. படத்தை வெளியிட, ஜூலை 16 அல்லது 23 தேதியில் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாததால் தயாரிப்பாளர்கள் இந்த தேதியை லாக் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.