LOADING...
"மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்: ஸ்ரேயா

"மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்": நடிகை ஸ்ரேயா பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2023
12:32 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று சென்னையில் நடந்த 'கப்ஜா' பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஸ்ரேயா, பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, "மீண்டும் சிவாஜி போன்ற படங்களில் நடிப்பீர்களா?" எனகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. ரஜினி மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பு அரங்கில் லைட் மேன் உள்பட அனைவருக்கும் வணக்கம் சொல்லுவார். நகைச்சுவை உணர்வு உண்டு. அவருக்குத்தெரியாத விஷயமே கிடையாது. ரஜினியுடன் நடிக்க விரும்பாதவர் யாரும் இல்லை. எனக்கு மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன்", எனக்கூறினார். ஸ்ரேயா நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் படம், கப்ஜா.கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், வெளியாகும் இந்த படத்தை, ஆர்.சந்துரு டைரக்டு செய்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கப்ஜா பட நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா