அடுத்த செய்திக் கட்டுரை
'வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய வருத்தம்' குறித்து பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா
எழுதியவர்
Venkatalakshmi V
May 01, 2023
02:47 pm
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.
இவர் தற்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், 'கஸ்டடி' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நாகசைதன்யா, பிரபல யூட்யூப் ரெவியூவரான இர்பானுடன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டனர்.
'ட்ரூத் ஆர் டேர்' என்ற விளையாட்டில், 'இது வரை வாழ்க்கையில் ஏற்பட்ட வருத்தம் என்ன?' என கேட்கப்பட்டது.
அதற்கு சைதன்யா, "வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் ஒரு படிப்பினையை தவிர, அதை வருத்தமாக பார்ப்பதில்லை" என கூறினார். நடிகை சமந்தாவும், நாகசைதன்யாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள்.
செய்தி இத்துடன் முடிவடைந்தது